அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது

Report
20Shares

அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது எனவும் இதுகுறித்து அமெரிக்காதான் இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவேன் என டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார் எனவும் அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது எனவும் இதுகுறித்து அமெரிக்காதான் இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாநாடுகளின் போது தான் ட்ரம்பை சந்தித்துப் பேசியுள்ள போதிலும் அந்த சந்திப்புகள் இருநாட்டு உறவை மேம்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்புக்குமிடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமெனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த அமைப்பில் மீண்டும் ரஷ்யாவை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1375 total views