பெரும் பீதியில் பொது மக்கள்!

Report
191Shares

ஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ ((Kapoho)) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடங்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் எரிக்குழம்புகள் நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.

கபோஹோ கடலில் எரிக்குழம்புகள் கலப்பதால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனித்தீவு உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.

நீரும், நெருப்பும் சங்கமிப்பதால் திரவமாக இருக்கும் எரிக்குழம்புகள், கருப்பு நிற பாறைகளாக உருமாறி வருகின்றன.

இதனால் கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தூய்மையான நீர் இருப்பைக் கொண்டுள்ள ஏரிப்பரப்பும் எரிக்குழம்புகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6783 total views