இளைஞர் ஒருவரின் அதிர்ச்சிகர செயல்..

Report
83Shares

ஜப்பானில் அதிவேக தொடரூந்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில், ஒரு பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாக்கா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 'புளற்' என அழைக்கப்படும், அதிவேக தொடரூந்தில், 22 வயதான இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடரூந்து பெட்டிக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள் அவரை கைது செய்து நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, தொடரூந்தில் 800 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உலகிலேயே மிக குறைந்த அளவிலான குற்றச்செயல் இடம்பெறும் நாடான ஜப்பானில், இப்படியான சம்பவம் மிக அபூர்வமாகவே அங்கு நடைபெறுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு பிறிதொரு 'புளட்' தொடரூந்தொன்றில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, ஒருவர் தனக்கு தானே தீயுட்டியுள்ளார்.

இந்த அனர்த்தத்தின் போது, மேலும் ஒரு பெண் பயணி கொல்லப்பட்டதுடன், 20 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

3412 total views