தாக்குதலுக்கு உள்ளான தமிழ் தேசிய பேரியக்க தலைவர்

Report
16Shares

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இன்று இரவு தஞ்சையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் வைத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தின் போது தலைவர் பெ.மணியரசன் மீதும், உடன் வந்த சீனு என்பவர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி, கை பையையும் பறித்து சென்றுள்ளனர்.

தற்பொழுது தஞ்சை வினோதன் மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பேருந்து நிலையத்திருந்து பின் தொடர்ந்து வந்து திடீரென தாக்கியதாக உடன் வந்த தோழர் சீனு குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் குறித்து இதுவரை எந்த தவகவலும் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

1422 total views