பாடசாலை மாணவிக்கு பல நாட்கள் நடந்துள்ள கொடூரம்

Report
92Shares

தமிழகம் சென்னையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மதுபானம் கஞ்சா கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவர் வசிக்கும் அக்கம்பக்கம் வீட்டு இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகி வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மது, கஞ்சா கொடுத்து அந்த இளைஞர்கள் பழக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியை திருவள்ளூருக்கு அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றனர். அங்கு ஓரிடத்தில் அடைத்து வைத்து சிறுமியை 7 இளைஞர்கள் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மதுபானம், கஞ்சா எடுத்துக் கொண்டதை சிறுமி ஒப்புக் கொண்டார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் மேலும் விசாரணை செய்த போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார்.

இதுதொடர்பாக சிறுமி அளித்த முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினர்; 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதே நிரம்பிய இளைஞர்கள் ஆவர்.

மேலும் 5 பேரை தேடும் பணியில் காவல்துறையினர்; ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்தபோது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி கூறியதாகவும் தெரிகிறது.

கஞ்சா, மதுபானம் கொடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4451 total views