நடுக்கடலில் தத்தளிக்கும் 600 அகதிகள்: முக்கிய நாடு கைவிருப்பு

Report
418Shares

600 அகதிகளுடன் இத்தாலித் துறைமுகம் நோக்கி வந்த ஆளேற்றும் கப்பலொன்றினை இத்தாலி அரசாங்கம் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தமையினால் குறித்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றது.

மால்டோ தீவுகளுக்கு அருகாமையில் உள்ள மத்தியதரைக் கடற்பகுதியில் குறித்த கப்பல் நிலைகொண்டுள்ளதையடுத்து மால்டோ தீவிடம் குறித்த அகதிகளை அனுமதிக்குமாறு இத்தாலி அரசாங்கம் கோரியுள்ளநிலையில் மால்டோ தீவு அரசாங்கமும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பல்வேறுபட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் இக்கப்பலில் இருக்கும் நிலையில் இக்கப்பல் எந்த நாட்டினைச் சேர்ந்ததென்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இத்தாலி கடற்படை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்து வருவோரை நாட்டிற்குள் அனுமதிப்பதனை நிறுத்துவதாக இத்தாலியின் தீவிர வலது சாரிக்கட்சியின் தலைவரும் உள்நாட்டு அமைச்சருமான மாட்டாயோ சால்வினி தமது தேர்த;ல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த 5 வருடங்களில் 600,000 க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்குள் படகு மூலமாகக் குடியேறிய நிலையில் சமீபகாலமாக அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆனால் அண்மைய நாட்களில் மீண்டும் அதிகளவிலான புலம்பெயர்ந்தோர் மீட்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

16439 total views