அணு ஆயுதங்களை கைவிட்டால் தனித்துவமான பாதுகாப்பு உத்தரவாதம் தரப்படும்…

Report
106Shares

வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பதிலாக தனித்துவமான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் ஆகியோருக்கிடையிலான உச்சிமாநாட்டிற்கு முன்னர் பேசிய பாம்பேயோ, இருநாட்டு உயரதிகாரிகளுக்கு இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வட கொரியா தனது அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவதை தவிர வேறு எதையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

3979 total views