டிரம்ப், கிம் ஜாங் உன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று

Report
6Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று(12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது.

டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று(12) காலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில், தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு என்பது, அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என்று வர்ணித்தார்.

வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1093 total views