ஆப்கானிஸ்தானில் 37 வீரர்கள் பலி

Report
6Shares

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணம், ஜலாதாபாத் பகுதியில் உள்ள கல்வித் துறையின் அலுவலகம் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் தலிபான்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 15 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

தலைநகர் காபூலில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அலுவலக நுழைவுவாயிலில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறியதில் 12 ராணுவ வீரர்கள் பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்தனர். ரம்ஜானை ஒட்டி தலிபான்கள் தரப்பில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

1111 total views