உலகின் பெரிய பனிமலை விரைவில் உருகி மறையும் அபாயம்..

Report
76Shares

அன்டார்டிகா கண்டத்தில் இருந்து உடைந்து, கடலில் 18 ஆண்டுகளாக மிதந்துவந்த உலகின் மிகப் பெரிய பனிமலை சிறிது சிறிதாக உடைந்தும் உருகியும் காணாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது.

அன்டார்டிகா உலகின் 5-வது கண்டமாக உள்ளது. முழுவதும் பனிமலைகள்தான். ஆனால், புவி வெப்பமயமாதலால் அன்டார்டிகாவில் உள்ள பனிமலைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டமும் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது அன்டார்டிகா கண்டத்தில் பனிக்கட்டிகள் உடைந்து பிரிந்து விடுகின்றன.

இதுபோல் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது. இதன் நீளம் 296 கி.மீ., அகலம் 37 கி.மீட்டர். உலகின் மிகப்பெரிய பனிமலை இது என்று நிபுணர்கள் கூறினர். அதற்கு பி-15 என்று பெயரிட்டனர். அன்டார்டிகாவின் ரோஸ் ஐஸ் ஷெல்ப் என்ற பகுதியில் இருந்து உடைந்த பி-15 பனிமலை கடலில் மிதந்து செல்ல தொடங்கியது. அவ்வப்போது பி-15 பனிமலையும் சிறு சிறு துண்டுகளாக உடைந்து உருகிவிட்டன.

கடைசியில் பி-15 பனிமலை யின் 4 துண்டுகள் மட்டும் கடலில் மிதந்து கொண்டுள்ளன. அவற்றை அமெரிக்க தேசிய பனி மையம் கண்காணித்து வரு கிறது. மேலும் சர்வதேச விண் வெளி ஆய்வு நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) உள்ள விண்வெளி வீரர்கள் கடந்த மாதம் 22-ம் தேதி பி-15இசட் பனிக்கட்டியை படம் எடுத்தனர். அப்போது அந்த பனிக்கட்டி 18 கி.மீ. நீளமும், 9 கி.மீ. அகலமும் இருந்தது.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறும்போது, ‘‘பி-15இசட் பனிக்கட்டி கண்காணிக்கும் அளவுக்கு இன்னும் பெரிய உருவத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது மேலும் பல துண்டுகளாக உடைந்தால் அல்லது உருகி அளவு சிறிதானால் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இப்போது பனிமலையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. முனைகளும் சிறு சிறு துண்டுகளாகி வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை விரைவில் மொத்தமாக காணாமல் போய்விடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

3963 total views