கிம் சிங்கப்பூரில், வடகொரியாவின் அணுவாயுதங்களின் பொறுப்பு யாரிடம்?

Report
66Shares

செவ்வாய்கிழமை சிங்கப்பூரில் அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகள் சந்திக்கும்வேளை அமெரிக்காவின் அணுவாயுதங்களின் கட்டுப்பாடு டிரம்பின் கரங்களிலேயே இருக்கும்.

ஆனால் வடகொரிய ஜனாதிபதி உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும்வேளை அவரது நாட்டின் அணுவாயுதங்கள் யாரின் பொறுப்பில் இருக்கும் என்பது முக்கியமான கேள்வி?

வடகொரியா அணுவாயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் சமீபத்திலேயே இணைந்து கொண்டுள்ளதால் அந்த நாட்டின் அணுவாயுதங்கள் யாரின் கைகளில் உள்ளன என்பது மர்மமான விடயமாகவே உள்ளது.

அணுவாயுதங்களை செலுத்துவதற்கான பட்டன் எப்போதும் எனது அலுவலக மேசையிலேயே உள்ளது என இவ்வருட ஆரம்பத்தில் கிம் ஜொங் அன் பிரகடனம் செய்திருந்தார்.

இதற்கு உடனடியாக டுவிட்டர் மூலம் பதில் அளித்த டிரம்ப் என்னிடமும் அவ்வாறான பட்டன் உள்ளது அது உங்களுடையதை விட மிகப்பெரியது அது செயற்படக்கூடியது என தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் கிம் ஜொங் அன்னை டிரம்ப் சந்திக்கும்போது டிரம்புடன் அணுவாயுத பட்டனை சுமந்த படி ஒரு பணியாளும் காணப்படுவார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பட்டன் அணுவாயுத உதைபந்து என அழைக்கப்படுகின்றது.அது அந்த வடிவத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.அணுவாயுதங்களை செலுத்துவதற்கான குறியீடுகளை அது கொண்டிருக்கும்.

வடகொரியாவின் அணுவாயுதங்கள் இலகுவில் ஊருடுவ முடியாத ,இறுக்கமான பாதுகாப்புடன் காணப்படும் குழுவொன்றிடம் காணப்படுகின்றன.

வடகொரிய ஜனாதிபதி தனது அணுவாயுதங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் சிங்கப்பூர் சென்றிருக்கமாட்டார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வடகொரியாவின் தொலைத்தொடர்பு ஆற்றல் எவ்வளவு வலுவானது என்பது தெரியாது,சிங்கப்பூரில் தங்கியிருக்கும் போது கிம் தனது பாதுகாப்பு தலைமையுடன் உடனடியாக தொடர்புக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பாரா என்பதும் தெரியாது என குறிப்பிடுகின்றார் வடகொரிய குறித்த கொள்கை நிபுணர் அன்றூ ஓ நெயில்.

சிங்கப்பூரிற்கு புறப்பட்டவேளை கிம் தனது அணுவாயுதங்களை வடகொரியாவில் உள்ள தனக்கு விசுவாசமான பல அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பார் என்கின்றார் தலைமைத்துவ விவகாரங்களிற்கான நிபுணர் மைக்கல் மடன்.

சிங்கப்பூரில் இருக்கும்வேளையில் கூட கிம்மினால் தாக்குதலிற்கான உத்தரவை வழங்க முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.

வடகொரியாவில் உள்ள் கிம்மின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் அவசரதொலைத்தொடர் வசதிகளை தங்கள் கையில் வைத்திருப்பார்கள் ஏவுகணைகளை இயங்கச்செய்வதற்கான அமைப்புமுறைகளை செயற்படுத்துவதற்கான குறீயீட்டு முறை காணப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த தொடர்பாடல்களை செயற்படுத்துவதற்கென சில நியமிக்கப்பட்ட நிலைகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை எவரும் பதட்டத்தில் தாக்குதலொன்றை மேற்கொள்வதை தடுக்ககூடிய வலுவான தொலைத்தொடர்பு வசதிகள் வடகொரியாவிடம் உள்ளதா என மற்றொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிம் தான் வெளிநாடு செல்லும்போது உத்தரவுகளை கையாளக்கூடிய தலைமைப்பீடமொன்றை உருவாக்கியிருப்பார் என அந்த ஆய்வாளர் தெரிவிக்கின்றார்

3573 total views