அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க, சீன விமானத்தில் வந்த கிம்! பின்னணி என்ன?

Report
242Shares

வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க சீன நாட்டு விமானத்தில் வந்துள்ளார்.

கிம் ஜாங்க் உன் 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் வடகொரிய அதிபராக பதவியேற்றதிலிருந்து வடகொரியாவின் பியாங்யாங்கிலிருந்து மிக நீண்ட விமானப் பயணத்தை மேற்கொண்டதில்லை.

அமெரிக்காவுக்கு சவாலாக வடகொரியா சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களை மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில், இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர், இன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தது.

அதே நேரத்தில், வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் பணிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் வடகொரிய அரசு கட்சியின் செய்தித்தாள் கிம் ஜாங் ஏர் சீனா போயிங் 747 விமானத்தில் பயணித்தார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது ஒரு நாடு தானே முன்வந்து கருத்தியல் ரீதியாக நட்புபாராட்டும் செயல் என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து சீயோலின் டாங்குக் பல்கலைக்கழகத்தின் வடகொரிய ஆய்வுகள் துறை பேராசிரியர் கோ யு ஹுவான் நேற்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “வடகொரியா முழுமையான அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படவில்லை என்றால், அது நடைமுறை ரீதியான காரணமாக இருக்கலாம்.

ஆனால், அதே நேரத்தில் வடக்கில் கொரியாவுக்கு பின்னே சீனா இருக்கிறது என்பதை அந்நாட்டு மக்களுக்கு குறியீடாகக் காட்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங்க் உன் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த விமானத்தை விஐபி பயணிகள் பயணிக்கும் வழியாக இயக்கியுள்ளனர்.

இது தொடர்பாக ஜெங்ஷுவாங் கூறுகையில், “வட கொரியா திங்கள் கிழமை ஒரு விமானத்தைக் கேட்டதன் பேரில் சீனாவின் சிவில் ஏர்லைன் விமானம் வழங்கப்பட்டது.

சீனா, கிம் ஜாங்கின் பாதுகாப்பை மனதில் வைத்து குழுவாக பயணம் செய்யக் கூடிய வடகொரியாவின் பழைய விமானங்களை கொடுத்தது. கிம் ஜாங்கின் தந்தை இரண்டாவது கிம் ஜாங் விமானத்தில் பயணம் செய்வதற்கு அச்சப்பட்டு தொடர் வண்டியில் பயணம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜாங்க் கடந்த மே மாதம் வட கிழக்கு சீனா அருகே சீன அதிபர் ஸீ ஜிங்பிங்கை சந்திப்பதற்கு தனிஜெட் விமானத்தை பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8646 total views