பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்

Report
20Shares

பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா அருகே உள்ள செம்பிலியால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலை எதிர்கொண்டு போரிட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் இரு தரப்புக்கு இடையே சண்டை நீடித்து வருகிறது.

இந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது அத்துமீறிய தாக்குதல் இதுவாகும். ஜூன் 3ஆம் தேதி நடந்த தாக்குலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் நீத்தனர்.

683 total views