டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை பெறும் வெற்றியாக கொண்டாடும் வடகொரியா

Report
74Shares

டொனால்ட் ட்ரம்ப்புக்கும், கிம் ஜோன் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு தமது நாட்டுக்கு பெரும் வெற்றி என வடகொரியா கொண்டாடி வருகின்றது.

வடகொரிய ஊடகங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க தடைகளை தகர்த்த விரும்புவதாகவும் வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பான செய்திகள் வடகொரிய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பல புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடகொரிய அதிகாரபூர்வ நாளிதழில், குறித்த சந்திப்பை நூற்றாண்டின் சந்திப்பு என வர்ணித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2241 total views