தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி! காரை சவப்பெட்டியாக்கிய பாசக்கார மகன்

Report
303Shares

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் இறந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார்.

நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தைச் சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

இறந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என்று அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அண்மையில் அவர் தந்தை இறந்து விட்டார். தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையை வைத்து அடக்கம் செய்துள்ளார் அஷுபுய்க்.

இந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியானதை அடுத்து பலர் இந்த சம்பவத்தை கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் இளைஞர் ஒருவர், தனது ஆசை காரை தனது இறப்புக்குப் பின்னர் தன்னுடனே புதைக்க வேண்டும் என கூற்றின் படி, அவர் இறந்த பின்னர் காரில் வைத்து புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

9767 total views