சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசி

Report
21Shares

ஜப்பானில் அயாகோ என்பவர், காதலித்த சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசிப் பட்டத்தைத் துறக்கிறார்.

ஜப்பான் அரச குடும்ப வழக்கப்படி, மன்னர் வழி வந்த குடும்பத்தில் அல்லாமல், சாமானியரின் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவரை மணம் முடிக்கும் பெண்கள், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி, இளவரசிப் பட்டத்தையும் துறக்க வேண்டும்.

ஆனால், அரச குடும்ப ஆண்கள் சாமானியப் பெண்ணை திருமணம் செய்தால் இளவரசர் அல்லது அரசர் பதவியிலேயே நீடிக்கலாம். ஏற்கெனவே சாமானியரைக் காதலித்த 2 இளவரசிகள், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய நிலையில், 27 வயதான அயாகோ , சரக்குப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 32 வயதான கெய் மோரியாவை காதலிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இவரும், திருமணத்துக்குப் பின் அரச குடும்ப அந்தஸ்தில் இருந்து வெளியேறினாலும், பெரும் தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

1263 total views