காவல்துறையினரின் விசாரணையில் இளைஞன் பலி!

Report
18Shares

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, Nantes நகரில் உள்ள rue des Plantes பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 8.30 மணி அளவில் , மகிழுந்து ஒன்றில் வந்த இளைஞனை CRS படையினர் நிறுத்தியுள்ளனர். அடையாள அட்டையை காவல்துறையினர் கோர, குறித்த இளைஞன் அதை காண்பிக்க மறுத்துள்ளான். இதனால் அவனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும், போது இருவருக்கும் மோதல் வெடித்ததாகவும், அதன்போது CRS அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அறிய முடிகிறது.

22 வயதுடைய இளைஞனின் கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்ததாகவும், இளைஞன் சிறிது நேரத்துக்குள்ளாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் பலர் Nantes நகரின் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல வாகனங்கள் எரியூட்டப்பட்டும், அடித்து நொருக்கப்பட்டும் உள்ளன.

1214 total views