அமெரிக்காவில் நடைபெற்ற பர்கர் உண்ணும் போட்டி

Report
11Shares

அமெரிக்காவில் பர்கர் உண்ணும் போட்டியில் பெண் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்றார். வாஷிங்க்டன் நகரில் பர்கர் உண்ணும் போட்டி நடத்தப்பட்டது. வாஷிங்டனை தலைமையிடமாக கொண்ட தனியார் பர்கர் நிறுவனம் வருடந்தோறும் ஜூலை 4ம் தேதி இப்போட்டியை நடத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட 8 போட்டியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பர்கர் உண்டனர்.

குறிப்பிட்ட கால அளவுக்குள் அதிக பர்கர்களை உண்பவருக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே போட்டி கடுமையாகவே இருந்தது. சூற்றியிருந்தவர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

அவர்களில் மாலி என்ற பெண் 10 நிமிடங்களில் 27 பர்கர்களை சாப்பிட்டு சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனையடுத்து அவருக்கு 1,500 டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

909 total views