திமிங்கலம் போன்று விமானத்தை வடிவமைத்த AIRBUS நிறுவனம்

Report
33Shares

AIRBUS நிறுவனம் தங்களின் விமானத்திற்கு அளித்துள்ள புதிய வடிவமைப்பு கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் BELUGA எனப்படும் வெள்ளை திமிங்கலங்கள் பற்றி நமக்கு நன்கு தெரியும். மனிதர்களுடன் நட்பாக பழக கூடியவை BELUGA திமிங்கலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடிப்படையாக கொண்டு ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்த A300600ST விமானங்கள், வருங்காலங்களில் பெரிய விமானங்களின் தேவை அதிகரிக்கவும் என்பதால் ஏர்பஸ் நிறுவனம் A300600ST என்ற பெரிய விமானங்களை தயாரித்தது.

ஆனால் இவை பார்க்க BELUGA திமிங்கலம் பொன்று இருப்பதால் BELUGAXL விமானம் என்று அழைக்கப்படுகிறது. அவற்றிற்கு தற்போது BELUGA திமிங்கலம் போலவே நில நிறகண்கள், கருப்பு நிறவாய் உள்ளிட்டவை இடம்பெறும் வகையில் பெயிண்ட் செய்து AIRBUS நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள விமானங்களை விட அதிக நீளமும், அகலமும் கொண்ட BELUGA விமானங்கள், மிகப்பெரிய விமான இறக்கைகளையும், ராக்கெட்களுக்கு தேவையான பாகங்களையும் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.

1849 total views