லண்டனில் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள அவமானம்!

Report
227Shares

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் லண்டன் பயணத்தின்போது அவரை ஒரு குழந்தையாகச் சித்திரிக்கும் இராட்சத பலூன் அங்கு பறக்கவிடப்படும்.

லண்டனின் ஆளுநர் சாதிக் கான் (Sadiq Khan) போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆரஞ்சு நிறத்திலான அந்த பலூன் டிரம்ப் அணையாடையை அணிந்திருப்பதைச் சித்திரிக்கும்.

காலை 9.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 வரை 30 மீட்டர் உயரத்தில் அது நாடாளுமன்றத்தின் அருகில் பறக்கவிடப்படும்.

அமைதியான போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் வரலாம் என்பதை ஆளுநர் உணர்ந்துள்ளதால் இதற்கு இணக்கம் தெரிவித்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் இராட்சத பலூனிற்கு ஆதரவு தெரிவிக்க 10,000க்கும் மேற்பட்டோர் இணையத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த வாரம், பிரதமர் திரேசா மேயையும் எலிசபத் ராணியையும் சந்திக்கத் திரு டிரம்ப் பிரிட்டன் செல்கிறார். அப்போது அங்கு பெரும் போராட்டங்கள் நடைபெறக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

8046 total views