பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்து பெண் போட்டி!

Report
26Shares

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில், இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண் ஒருவர், மாகாண தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தேர்தல் வரும் ஜூலை 25 அன்று நடைபெற உள்ளது.மேவார் சமுதாயத்தை சேர்ந்த சுனிதா பார்மர் (31) என்பவர், சிந்து மாகாணத்தின், தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்-56 தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பலர் வசிப்பது குறிப்பிடத்தக்கது.சுயேட்சையாக போட்டியிடும் பார்மர் கூறுகையில், முந்தைய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் தான் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

தான் வசிக்கும் இந்த பகுதியில், அடிப்படை வசதிகளை கூட அரசு செய்து தரவில்லை என்றும் 21ம் நூற்றாண்டில், அடிப்படையான சுகாதார வசதிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி நிலையங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

1688 total views