கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி

Report
185Shares

ஸ்காட்லாந்தில் 6 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளி இளைஞர் Greenock நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தை உலுக்கிய இந்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞரின் பெயரை விசாரணை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

குறித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி Alesha MacPhail குடும்பத்தாருக்கு நன்கு அறிமுகமானவர் எனவும், 16 வயது இளைஞர் எனவும் மட்டுமே தகவல் வெளியிட்டுள்ளனர்.

உறுதியான ஆதாரங்கள் சிக்கியதன அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை விசாரணை அதிகாரிகள் Greenock ஷெரிஃப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் சடலம் Bute தீவில் அமைந்துள்ள பாழடைந்த ஹொட்டல் ஒன்றில் இருந்து கடந்த திங்களன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது.

கொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிறுமி Alesha MacPhail கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவமனை குறிப்புகள் உறுதி செய்துள்ளன.

6617 total views