கோடீஸ்வரர் பட்டியல்: 3வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர்

Report
89Shares

உலக பணக்காரர்கள் பட்டியலில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும், 2வது இடத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் உள்ளனர்.

இந்த பட்டியலில், தொழிலதிபர் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது பப்பெட் சொத்தை விட 2,565 கோடி ரூபாய் அதிகமாகும்.

3850 total views