உலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஆக்டோபஸ் உணவாக மாறியது

Report
319Shares

உலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஆக்டோபஸ் கொல்லப்பட்டு உணவாக மாறியது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகளை ஜப்பான் நாட்டில் உள்ள ஆக்டோபஸ் சரியாக கணித்தது. ராபியோ என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ் உலக கோப்பையில் பங்கேற்கும் ஜப்பான் அணியின் முடிவுகளை கிட்டத்தட்ட சரியாகவே கணித்தது.

குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் செயற்கை குளத்தில் ஆக்டோபஸை விட்டு முடிவுகள் கணிக்கப்பட்டன. உலக கோப்பையில் ஜப்பான் பங்கேற்ற 3 போட்டிகளின் முடிவுகளையும் ராபியோ சரியாக சொன்னது.

actobus

கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் ஜப்பான் வெற்றிப்பெறும் என்றும், ஒரு போட்டியில் டிராவில் முடியும் என்றும் குளத்தில் நகர்வதன் மூலம் ராபியோ கணித்தது. போலந்திற்கு எதிரான போட்டியில் ஜப்பான் தோல்வியடையும் என்று ராபியோ கணித்ததை தொடர்ந்து கொல்லப்பட்டது.

ராபியோவின் உரிமையாளரான கியோமி பொருளாதார பிரச்சனை காரணமாக அதை சந்தையில் விற்றுவிட்டதாக ஜப்பான் ஊடங்கள் தெரிவித்தன. சந்தையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ராபியோ அன்றிரவு கடல் உணவாக மாறியது.

இதற்கு முன்பு 2010ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையின் முடிவுகளை பாலி என்ற ஆக்டோபஸ் கணித்தது குறிப்பிடத்தக்கது.

11422 total views