உலகெங்கும் 7 கோடி ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

Report
36Shares

உலகநாடுகளின் அரசு மற்றும் அரசியல்வாதிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பிவந்த சுமார் 7 கோடி பேரின் கணக்குகளை சமூக வலைத்தளமான டுவிட்டர் முடக்கியுள்ளது.

இதன்மூலம் பல நாடுகளின் அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதுடன் ஆபாசமான சித்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இது, உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதனையடுத்து , சர்ச்சைக்குரியவையாக கருதப்பட்ட கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவுமென விசேடமாக அதிகமானோர் நியமிக்கப்பட்டு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் சுமார் 7 கோடி பேரின் போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வோஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சிலவேளைகளில், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2387 total views