ஜப்பானில் வெள்ளம்: 76 பேர் பலி

Report
12Shares

ஜப்பான் நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 76 பேர் பலியாகியுள்ளனர்.

ஜப்பானில் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‘‘பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், காப்பாற்றவும் நேரத்துடன் போட்டியிட்டு பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மழை, வெள்ளத்தால் 76 பேர் இறந்துள்ளதாகவும் 92 பேரைக் காணவில்லை என்றும் ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிஹைட் சுகா நேற்று டோக்கியோவில் தெரிவித்தார்.

409 total views