ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டாய ராணுவ சேவை: 16 மாதமாக அதிகரிப்பு

Report
6Shares

ஐக்கிய அரசு அமீரகத்தில் (யுஏஇ) கட்டாய ராணுவ சேவை காலம் 12 மாதங்களில் இருந்து 16 மாத காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரசு அமீரக நாட்டில் 18 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் ராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற சட்டம் 2014 முதல் அமலில் உள்ளது. அதன்படி 12 மாதம் ராணுவத்தில் சேவையாற்ற வேண்டும்.

பெண்கள் தாமாக முன்வந்தால் ராணுவத்தில் பணியாற்றலாம். அவர்களுக்கு ராணுவப் பணி கட்டாயமில்லை.

இந்த நிலையில் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ பணிக்காலத்தை 12 மாதத்திலிருந்து 16 மாத காலமாக அதிகரித்து யுஏஇ அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, அரசியல், தேசிய, சமூக, பொருளாதார அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை அரசு எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற திட்டமானது யுஏஇ அரசின் முக்கிய முடிவுகளுள் ஒன்றாகக் பார்க்கப்படுகிறது.

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக யுஏஇ தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது.

ஏமன் நாட்டில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின்போது சவுதி தலைமையிலான படையில் யுஏஇ நாட்டின் ராணுவமும் பங்கேற்றது.

230 total views