போலி காவல்துறை அதிகாரிகளால் வியாபாரி சுட்டுக்கொலை!

Report
24Shares

திங்கட்கிழமை இரவு, 93 வது மாவட்டத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், காவல்துறையினர் வேடமணிந்த கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜப்பானிய பொருட்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும் Japan Expo கடையின் முதலாளி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டு கலாச்சார நிகழ்வு நிறைவுற்ற மறுநாள் ஜூலை 9 ஆம் திகதி இரவு, Villepinte இல் உள்ள Parc des Expositions பகுதியில் இச்சம்பவம் இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வேடமணிந்த ஐந்து கொள்ளையர்கள் மகிழுந்தை நிறுத்தி சுற்றி வளைத்தனர். தவிர மேலும் இரு அதே உடை அணிந்திருந்த நபர்கள் உந்துருளியில் நின்றுள்ளனர்.

அன்று கண்காட்சியில் ஜப்பானிய வாள் ஒன்று €100,000 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தது. அந்த பணத்தினை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஜப்பான் நாட்டவரைச் சுட்டு கொன்று விட்டு €100,000 பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

1429 total views