சாலைப் பள்ளத்தில் தொடர்ந்து விழுந்த 2 கார்கள்

Report
14Shares

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹார்பின் நகரில் சாலைப் பள்ளத்தில் அந்த சாலையில் சென்ற 2 கார்கள் வரிசையாக விழுந்துள்ளன.

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ளது ஹெய்லாங்ஜியாங் மாகாணம். இந்த மாகாணத்தின் ஹார்பின் நகரச் சாலையில் ஒரு ராட்சதப் பள்ளம் உருவாகி உள்ளது. அந்தப் பள்ளம் சுமார் 86 சதுர அடி அளவில் இருந்தது. அதனால் அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாறி உள்ளனர்.

இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுனர் பள்ளத்தை கவனிக்காததால் அந்த வாகனம் பள்ளத்தில் விழுந்துள்ளது. அந்தக் காரின் பின்னால் வந்த மற்றொரு காரின் ஓட்டுனரும் பள்ளத்தை கவனிக்கவில்லை. முன் சக்கரங்கள் உள்ளே இறங்கிய நிலையில் அவர் பிரேக்கை அழுத்தி உள்ளார். ஆயினும் பலனின்றி அந்தக் காரும் பள்ளத்தில் விழுந்தது.

அதன் பின் வந்த மூன்றாவது கார் ஓட்டுனர் பள்ளத்தை கவனித்து உடனடியாக வாகனத்தை நிறுத்தி உள்ளார். அதன் பிறகு மீட்புப் பணியினர் விரைந்து வந்து பல்லத்தில் விழுந்த கார்களையும் அதில் இருந்தவர்களையும் ஒரு சில காயங்களுடன் மீட்டுள்ளனர்.

1400 total views