கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் : சௌதி அரேபியா அதிரடி

Report
22Shares

கனடா நாட்டில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற சௌதி அரேபிய அரசு தன் நாட்டில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உள்ளது.

கனடா அரசு சமீபத்தில் சௌதி அரேபியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டியது மேலும் மனித உரிமை ஆர்வலர்களை சட்ட விரோதமாக சௌதி அரசு சிறையில் அடைத்துள்ளதாகவும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கனடா அரசு கூறியது. இது சௌதி அரேபிய அரசுக்கு கோவத்தை உண்டாக்கியது.

ரியாத்தில் அமைந்துள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை 24 மணி நேரத்துக்குள் சௌதி அரேபியாவை விட்டு வெளியேற அரசு உத்தரவு இட்டுள்ளது. அத்துடன் கனடாவில் உள்ள சௌதி அரேபிய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துள்ளது.

சௌதி அரேபியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவைகள் நடைபெற்று வந்தன. அந்த சேவைகள் அனைத்தையும் சௌதி அரேபிய அரசு ரத்து செய்துள்ளது.

இது குறித்து கனடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரிலாண்ட், “சௌதி அரேபியாவின் இந்த நடவடிக்கைகள் கனடாவுக்கு திருப்தியாக இல்லை. சௌதி அரேபியாவின் இது போன்ற நடவடிக்கைகள் கனடா அரசுக்கு ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது” எனக் கூறி உள்ளார்.

1677 total views