15 வருடங்களாக ஒரு பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்த மதகுரு

Report
39Shares

இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு மதகுரு 15 வருடங்களாக ஒரு பெண்ணை அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியா நாட்டில் ஜாகர்தா அருகில் உள்ள ஒரு சிற்றூரில் ஒரு மதகுரு தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த மருமகளின் 12 வயது தங்கை தங்கை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு திடீரென காணமல் போய் உள்ளார். மதகுரு அந்த பெண்ணுக்கு ஜாகர்தா துறைமுகப் பகுதியில் வேலை கிடைத்துள்ளதால் அங்கு சென்றுள்ளதாக கூறியதை அனைவரும் நம்பி உள்ளனர்.

மதகுருவின் மருமகள் அருகில் இருந்த காட்டின் குகைப்பகுதியில் தனது தங்கை போல் ஒரு பெண் இருப்பதை கண்டு அனைவரிடமும் கூறி உள்ளார். மதகுரு ஊரில் இல்லாததால் அந்த மருமகள் தானே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதை ஒட்டி காவல்துறையினர் அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போன சிறுமிக்கு மற்றொரு சிறுவனுடன் காதல் இருந்துள்ளது. அந்த சிறுவன் திடீரென மரணம் அடைந்துள்ளதால் சிறுமி வருத்தம் அடைந்துள்ளார். மதகுரு தனது உடலில் அந்த சிறுவனின் ஆவி உள்ளதாக அந்தப் பெண்ணை நம்ப வைத்து சிறுமியை தனியே வைத்துள்ளார்.

தன் உடலில் அந்த சிறுமியின் காதலனுடைய ஆவி புகுந்துள்ளதாக கூறி அவரை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிகழ்வு சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக நிகழ்ந்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் படி அந்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசிய ஒரு முன்னேறிய இஸ்லாமிய நாடு என கூறப்பட்டாலும் அங்கு ஆவி, சூனியம் ஆகியவற்றில் மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

2330 total views