இந்திய பயங்கரவாதியை வெளியேற்ற தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவு.

Report
29Shares

மும்பையை சேர்ந்த டான் சோட்டா ஷகில் கூட்டாளியை பாகிஸ்தான் வேண்டுகோளை நிராகரித்து இந்தியாவுக்கு அனுப்ப தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வளையத்தில் உள்ளவ்ர் சோட்டா ஷகீல்

மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாவான சோட்டா ஷகிலின் கூட்டாளிகளில் சையத் முசாகிர் ஹுசைன் என்னும் முன்னா ஜிங்கரா என்பவரும் ஒருவர் ஆவார். இவர் மீது மும்பையில் வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர் என அந்நாடும் இந்தியக் குடியுரிமை பெற்றதாக இந்தியாவும் உரிமை கோரி வருகின்றன.

இவர் தற்போது தாய்லாந்து நாட்டு சிறையில் உள்ளார். அவரை சிறையில் இருந்து வெளியேற்றி நாடு கடத்தி சொந்த நாட்டுக்கு அனுப்ப தாய்லாந்து நீதிமன்றம் கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அவரை தம் நாட்டவர் எனக் கூறிய பாகிஸ்தானிடம் ஒப்படைக்க தாய்லாந்து நீதிமன்றம் அப்போது ஆணை இட்டிருந்தது.

அதன் பிறகு இந்திய அரசு அதிகாரிகள் ஜிங்கரா இந்தியாவை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களையும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆவணங்கள் அளித்தது. அதை ஒட்டி இந்த வழக்கை தாய்லாந்து நீதிமன்றம் விசாரித்து நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜிங்கராவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

நீதிமன்றம் ஜிங்கராவை பாகிஸ்தானியர் என தவறாக குறிப்பிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு சோட்டா ஷகீல் குறித்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க உதவும் என இந்திய அதிகாரிகல் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தீர்ப்பு படித்து முடிக்கப்பட்டதும் ஜிங்கரா மிகவும் ஆத்திரத்துடன் நீதிபதியை சரமாரியாக திட்டினார். அத்துடன் பாகிஸ்தான் தூதரக அதிகாரியும் அது போலவே ஆத்திரத்துடன் நடந்துக் கொண்டார்.

2007 total views