இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் 131 பேர் பலி

Report
12Shares

இந்தோனேஷியாவில் கடந்த வார இறுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் பட இடிந்து விழுந்தன.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஆயிரகணக்கானோர் வீடுகளை இழந்தனர். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131ஆக உயர்ந்துள்ளது.

மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு பலர் நசுங்கி இறந்திருப்பதை மீட்டு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் சிலர் உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூறமுடியவில்லை என்று மீட்டு குழுவை சேர்ந்த செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1411 total views