தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர்!! ஏன் தெரியுமா?

Report
73Shares

மாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த தலைமை ஆசிரியரை பெற்றோர் செருப்பால் அடித்த சம்பவமொன்று உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஹசாயானில் பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட உடைகளை பாடசாலைகளில் மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகள் உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்த மாணவிகள் பெற்றோரிடம் இதனை தெரிவித்தனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர், பொதுமக்களுடன் பாடசாலைக்குச் சென்று தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2663 total views