தென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்

Report
338Shares

தென்சீனா கடல்பகுதியை சீனா இராணுவமயப்படுத்துவதை அமெரிக்காவின் வேவு விமானத்தின் துணையுடன் சிஎன்என் செய்தியாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் பி8 ஏ பொசெய்டன் கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் சிஎன்என் செய்தியாளர்கள் தென்சீனா கடலை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது பவளப்பாறைகள் பாரிய தளங்களாக மாற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஐந்து மாடிக்கட்டங்களையும், ராடர் நிலையங்களையும் மின்நிலையங்கள் மற்றும் பாரிய இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விமானஓடுபாதைகளையும் வேவு விமானத்திலிருந்து பார்த்ததாக சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்சீனா கடற்பரப்பின் மேல் நாங்கள் அமெரிக்க கடற்படையின் வேவு விமானத்தில் பயணம் செய்தவேளை ஆறு முறை சீனா இராணுவத்தினர் எச்சரிக்கை செய்தனர் என சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இறமையுள்ள பகுதிக்குள் நாங்கள் உள்ளதாக தெரிவித்து எங்களை வெளியேறுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டனர் எனவும் சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது அமெரிக்க கடற்படையினர் தாங்கள் சர்வதேச சட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளையே பயன்படுத்துகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

10268 total views