சூறாவளியால் ஏராளமானோர் பலியகலாம்: அமெரிக்க அதிகாரிகள் அச்சம்..

Report

அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளை தாக்கிஅழிக்கக் கூடியதாக கருதப்படும் புளோரன்ஸ் சூறாவளியால் ஏராளமானோர் பலியகலாம் எனஅமெரிக்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

புளோரன்ஸ் சூறாவளி அமெரிக்காவின் கிழக்கு ரையோரமாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்தும் என்று அமெரிக்கமத்திய அவசரகால முகாமைத்து முகவரகத்தின் தலைவர் அறிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் வரலாறுகாணாத பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் புளோரன்ஸ் சூறவாளி தற்போது இரண்டாவதுபுயல் நிலைக்கு குறைந்துள்ள போதிலும் அதனால் ஏற்படக்கூடிய அழிவுகள் இன்னமும் மிகவும்மோசமானதாகவே இருப்பதாக அமெரிக்க மத்திய அவசரகால முகாமைத்து முகவரகத்தின் தலைவர்புரூக் லோங் எச்சரித்துள்ளார்.

தற்போது மணிக்கு 165 கிலோ மீற்றர் வேகத்தில்புளோரன்ஸ் சூறவாளி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் கரோலைனாமற்றும் வேர்ஜினியா மாநிலங்களில் அடிக்கணக்கில் அடை மழை பெய்யும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியால் பெய்யும் அடை மழை காரணமாக இந்தமாநிலங்களில் உள்ள நதிகள் உட்பட நீர் நிலைகளின் நீர் மட்டமும் 13 அடியால் உறரும்என்றும் எச்சரித்துள்ள அமெரிக்க மத்திய அவசரகால முகாமைத்து முகவரகத்தின் தலைவர்இதனால் ஏற்படக்கூடிய வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் ஏராளமானோர் பலியாகலாம்என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கான கால நேரம்குறைந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ள அமெரிக்க மத்திய அவசரகால முகாமைத்துமுகவரகம் நதி கரையோரங்கள் மற்றும் தாழ் நிலங்களில் வாழும் மக்களை முழமையாகவெளியேறுமாறும் உத்தரவிட்டிருக்கின்றது.

இதற்கமைய வட கரோலீனா, தென ரோலீனா,வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் வாழும் 17 இலட்கம் மக்களை அவர்களதுவீடுகளில் இருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

சூறவாளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களில்பத்து மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு கரையோரங்களை நோக்கி நகரும்புளோரன்ஸ் சூறவாளி காரணமாக கரோலீனா மாநிலத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று 20முதல் 30 அங்குலம் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சூறவாளி காரணமாக மின்விநியோகம் துண்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக மக்கள் பெருமளவில் எரிபொருட்களைசேமிக்க முற்பட்டுள்ளதாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் 1400 க்கும் மேற்பட்டவிமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு கரையோர மாநிலங்களின்கரையோரங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

1008 total views