98 வயது தோழியை மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்த இளவரசர் ஹரி

Report

இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழியை சிட்னியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்கலுக்கும் திருமணம் நடந்தது. தற்போது மேகன் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழி டாப்னே துனே என்பவரை சிட்னியில் உள்ள ஓபரே இல்லத்தில் சந்தித்தார்.

இவரை இளவரசர் ஹாரி கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்றபோது சந்தித்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர்களுக்கு இடையே நட்பாக மாறியது.

இச்சந்திப்பின் போது தனது மனைவி மேகனை தோழி துனேவுக்கு ஹாரி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மேகனை துனே கட்டி தழுவி வாழ்த்தி ஆசி வழங்கினார்.

இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக துனே கூறினார். அதற்கு மேகன் நன்றி கூறினார். அவரிடம் விடை பெற்றபோது ஹாரியும் மேகனும் அவருக்கு முத்தமிட்டனர்.

1673 total views