இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் பலி!

Report

ஜிம்பாப்வே நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தானது, ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரேவில் இருந்து கிழக்கு நகரான ருசாபே நகரை இணைக்கும் சாலை ஒன்றில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று, எதிர் எதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகள் தனது கட்டுப்பாட்டை மீறியதில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த விபத்தில் பெரும்பாலோனோர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் குறித்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6903 total views