சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விலை அதிகரிக்க வாய்பு!

Report

புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியை, பாவ வரி என பெயர் மாற்றி 10% அதிகமாக வசூளிக்க பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது!

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் மீதான வரியை உயர்த்தி, கிடைக்கெப்பெறும் கூடுதல் வரித் தொகை சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் சேர்க்க பாக்., அரசு முடிவுசெய்துள்ளது.

தனி மனிதர்களுக்கும், சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கும் மது, புகையிலை, குளிர்பானங்கள், துரித உணவுகள் உள்ளிட்டவைகள் மீது பாவ வரி என்ற பெயரில் பல நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாக்கிஸ்தான் நாட்டிலும் இந்த வரி அமலில் உள்ள நிலையில் அதனை 10% உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேசிய சுகாதார சேவைகள் துறை அமைச்சர் மெஹ்மூத் கியானி தெரிவிக்கையில்... "பாக்.,-னில் ஆண்டுதோறும் 1,8,800 பேர் புகையிலைப் பொருள்களால் உயிர் இழந்து வருகின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 298 பேரின் உயிரிழப்புக்கு புகையிலைப் பொருள்கள் காரணமாக அமைகிறது.

மேலும் நாட்டில் நாள்தோறும் புதிதாக 1,500 இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே உயிர்கொல்லி புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் வகையில்; பல்வேறு நாடுகள் நடைமுறையில் இருப்பது போன்று பாவத்திற்கான வரி பாக்கிஸ்தான் நாட்டிலும் நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் விற்கப்படும் சிகரெட் மீது விதிக்கப்படும் பாவ வரி 10% அதிகரிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் சுகாதாரத் துறையில் செலவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1092 total views