பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து : 4-பேர் உயிரிழப்பு!

Report

டொமினிகாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 4-பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, டொமினிகா தலைநகர் சான்டோ டொமிங்கோவின் வில்லாஸ் அக்ரிகோலஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலையில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில், தொழிற்சாலையில் நேற்று தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தபோது, பாய்லர் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

இதையடுத்து, இந்த தீயானது அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், குறித்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், குறித்த விபத்து தொடர்பாக வழங்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

1315 total views