கலங்கரை விளக்கத்தை பாதுகாக்க ரூ.91 லட்சம் சம்பளம்! அடித்தது ஜாக்பார்ட்

Report

கலிபோர்னியா தீவின் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை பாதுகாக்க ரூ. 91 லட்சம் சம்பளம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை, கலங்கரை விளக்கத்தை பராமரித்து வரும் தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அருகில், சான் பிரான்ஸிஸ்கோ தீவு பகுதியில் உள்ள ஈஸ்ட் பிரதர் லைட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் கடந்த 1874-ம் ஆண்டு கட்டப்பட்டது.

அதன் பிறகு அதனை, 1960-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு தொண்டு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும் இடம் மிகவும் தனித்துவம் ஆனது என்றும் இதில் உணவு மற்றும் தங்குமிடம் கொண்ட வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

உரிய தகுதிகளாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, படகுகளை இயக்க உரிமம் பெற்றிருக்க வேண்டும், கடல் பயணங்கள் பற்றிய போதிய அறிவு ஆகியவை இந்த வேலைக்கான தகுதிகள் ஆகும்.

இந்த வேலைக்கு சேர்த்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இருவருக்கும் சேர்ந்து ரூ.91 லட்சம் சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1002 total views