மனைவியை பிரிந்த உலகின் முதல் பணக்காரன்

Report

உலக பெரும் பணக்காரர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டன

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும்.

இவருடைய மனைவி மெக்கென்சி (48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன.

மேலும், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இவர்,பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் ஆவார்.

இந்த நிலையில், ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த தகவலை அவர்கள் இருவரும் நேற்று தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்தனர்.

அதில், நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் நாங்கள் தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் சிறந்த பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் கூட்டாளிகளாக சேர்ந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளனர்.

16013 total views