புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா!

Report

தகவல் சாதனங்களின் புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

குறித்த செயற்கைக்கோளை, சீனா சிச்சுவான் மாகாணத்தில் உள்ள க்ஷிசங் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.11 மணிக்கு ஸோங்ஸிங்-2டி (Zhongxing-2D) என பெயரிடப்பட்ட செயற்கைக்கோளைச் சுமந்தபடி லாங் மார்க்-3பி(Long March-3B) ராக்கெட் நெருப்பையும், புகையையும் உமிழ்ந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஆனால், இதனை விண்ணில் ஏவும் பணிகள் முழுமையாக முடிய சுமார் 4-மணி நேரம் ஆனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சி, வானொலி போன்ற தகவல் சாதனங்களுடன் புவிசார் தொடர்புகளுக்காக செலுத்தப்படுகிறது.

இதனை கடந்த 2017ம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஸோங்ஸிங்-9ஏ செயற்கைக்கோளுடன் இதன் பகுதியை விண்ணில் செலுத்தியபோது, திட்டமிட்டப்படி சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படாததால் இந்த திட்டம் தாமதமடைந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் சரியான சுற்றுவட்டப் பாதையில் ஸோங்ஸிங்-2டி செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த, ஸோங்ஸிங்-2டி செயற்கைக்கோள் மற்றும் லாங் மார்க்-3 பி கேரியர் ராக்கெட் ஆகியவை, சீனாவின் ஏரோஸ்பேஸ் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

670 total views