ஐ.எஸ்.ஐ.க்காக வேலை பார்த்ததாக இந்திய ராணுவ வீரர் கைது

Report

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக வேலை பார்த்ததாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் டேங்க் ரெஜிமண்ட் என்ற ராணுவ படைப் பிரிவு உள்ளது.

இதில் பணிபுரிந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோம்பிர் என்ற வீரர், ஐ.எஸ்.ஐ., உளவாளி ஒருவருக்கு, இந்திய ராணுவம் சார்ந்த முக்கிய தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனிகா சோப்ரா என்ற போலிப் பெயரில் உள்ள பேஸ்புக் பயனர் தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி என சந்தேகிக்கப்படும் நபர் என்றும், அந்த நபருக்கு சோம்பிர் ரகசிய தகவல்களை அனுப்பி இருப்பதாக அம்மாநில போலீசார் கூறியுள்ளனர்.

விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

926 total views