சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் முடிவு வேண்டும்: துபாயில் ராகுல் பேச்சு!

Report

சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட்டு விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினேன்.

அவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளத்தில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்பதை அதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்யட்டும்.

முன்னதாக, சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அதை ராகுல் காந்தி வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1002 total views