சிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க!

Report

சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த சம்பவத்தில், சிங்கப்பூரில் தனது மகனை காண சென்ற இந்திய வயதான தாய் ஒருவர் நடைபாதையில் மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை காயவைத்துள்ளார். பின்னர், அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியுள்ளார்.

தற்போது, இதன் காட்சி தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளதுடன் தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அதில் அவர், இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூரின் விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் அம்மாவை அழைத்து வந்திருக்கிறார்.

பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

5343 total views