ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

Report

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், ஆஸ்திரியாவின் பனிப்பிரதேசமான வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. குறித்த பகுதியில், பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

871 total views