சிங்கப்பூர் பிரதமரின் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்து!

Report

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துக்களைப் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தனது சமூகவலைத் தளத்திலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்துள்ளார்.

அதில், தமிழ் அறுவடைத் திருவிழாவின் முதல் நாளான பொங்கல், தை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுவதைப் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொங்கல் பண்டிகையின் போது, பானைகளில் பால் பொங்கி வழியும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்ற முழக்கமிடும் மரபையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்போது பால் பொங்கும் தருணம், வாழ்க்கையில் வளமையும் செழிப்பும் மேலோங்கி வருவதைக் எடுத்துக்கூறுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

1807 total views