சீனாவிற்கு செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை!

Report

சீனாவிற்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, கனேடியருக்கு சீனா, கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்தநிலையில், இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சீன, நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

தற்போதைய, மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையிலேயே சீனாவிற்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சீன நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரை வன்கூவரில் கனேடிய பொலிஸார் கைதுசெய்த சம்பவத்தினை அடுத்து, கனேடியர்கள் இருவர் அண்மையில் சீனாவில் கைது செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

1322 total views