பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

Report

பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த, நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29 மைல்) ஆழத்தில் தாக்கியது. இது ஒரு மேலோட்டமான பூகம்பமாக அமைந்தது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் இருக்கக் கூடும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இருப்பினும், குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

வானுட்டு தீவுகள் பசிபிக் பெருங்கடலில் ‘ரிங் ஆப் பயர்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் பெரிய பூகம்பங்களும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

3579 total views